/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரப்பில் உயிர்வேலி பராமரிப்பு கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு வரப்பில் உயிர்வேலி பராமரிப்பு கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு
வரப்பில் உயிர்வேலி பராமரிப்பு கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு
வரப்பில் உயிர்வேலி பராமரிப்பு கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு
வரப்பில் உயிர்வேலி பராமரிப்பு கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு
ADDED : ஜூன் 04, 2025 08:53 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு வாழை உட்பட பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமுள்ள இப்பகுதியில், ஆடிக்காற்று சீசனில், சாகுபடி பயிர்கள் பாதிக்கின்றன.
இதைத்தவிர்க்க, விளைநிலங்களின் வரப்புகளில், அகத்தி, தேக்கு உட்பட மரங்களை உயிர் வேலியாக வளர்க்க, தோட்டக்கலைத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பல விவசாயிகள் வரப்புகளில், தேக்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'தேக்கு மரங்களை வரப்புகளில் வளர்ப்பதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. மரம் வளர்ப்புக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. தேக்கு மர இலைகள் மண்ணில் உதிர்ந்து உரமாக மாறுவதுடன், இயற்கை மூடாக்கு போல பயன்படுகிறது. தேக்கு மரங்கள், 15 ஆண்டுகளுக்கு பிறகு, பூத்து, 30 ஆண்டுகளுக்கு பிறகு, அறுவடைக்கு தயாராகிறது. விளைநிலங்களில், உயிர் வேலியாக தேக்கு மரங்கள், முக்கிய சாகுபடிக்கு பாதுகாப்பு அளிக்கிறது,' என்றனர்.