/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தந்தையர் தின விழா; மாணவர்களுக்கு போட்டி தந்தையர் தின விழா; மாணவர்களுக்கு போட்டி
தந்தையர் தின விழா; மாணவர்களுக்கு போட்டி
தந்தையர் தின விழா; மாணவர்களுக்கு போட்டி
தந்தையர் தின விழா; மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜூன் 16, 2025 09:39 PM

உடுமலை; உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தந்தையர் தின விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தைகள் மற்றும் தந்தையர் பங்கேற்ற மாறுவேடப்போட்டி, தந்தையருடன் மாணவர்கள் ஓரே மாதிரியான உடையில் வருதல், புகைப்படம், வீடியோ, வாழ்த்து அட்டை தயாரித்தல், கவிதை, கட்டுரை, கடிதம், ஓவியப்போட்டிகள் நடந்தன.
தொடர்ந்து தந்தையருக்கு விளையாட்டுப்போட்டிகளும் நடந்தன. மாணவர்களுக்கு நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.