ADDED : ஜன 02, 2024 11:34 PM
உடுமலை;திருப்பூர் மாவட்ட அளவிலான விரைவு ஓட்டப் போட்டி, உடுமலையில் வரும், 7ம் தேதி நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், தடகளத்தில் சிறந்த வீரர்களை, சாதனையாளர்களாக உருவாக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், மாவட்ட அளவிலான விரைவு ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி, உடுமலை அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில், வரும், 7ம் தேதி நடக்கிறது.
இப்போட்டியானது, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 வயது மற்றும் மூத்தோர் பிரிவின் கீழும் நடத்தப்படுகிறது. பிரிவுகளுக்கு ஏற்ப, 30, 50, 60, 100, 200, 400 மீ., துாரத்திற்கு ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது.
இதில், தகுதி வாய்ந்த வீரர், வீராங்கனையர் கலந்து கொள்ளலாம். விபரம் அறிய, 86677 99305, 97861 25453, 93630 00133 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.