/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முகூர்த்த சீசனில் விவசாயிகள் கோழிக்கொண்டை சாகுபடி முகூர்த்த சீசனில் விவசாயிகள் கோழிக்கொண்டை சாகுபடி
முகூர்த்த சீசனில் விவசாயிகள் கோழிக்கொண்டை சாகுபடி
முகூர்த்த சீசனில் விவசாயிகள் கோழிக்கொண்டை சாகுபடி
முகூர்த்த சீசனில் விவசாயிகள் கோழிக்கொண்டை சாகுபடி
ADDED : ஜூன் 13, 2025 09:38 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில், பூக்கள் சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. முக்கோணம், புங்கமுத்துார், ஆண்டியகவுண்டனுார் உட்பட கிணற்று பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி செய்யும் பகுதிகளில், பூக்கள் சாகுபடியும் தற்போது பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, முகூர்த்த சீசனை இலக்கு வைத்து இச்சாகுபடியை விவசாயிகள் திட்டமிடுகின்றனர். வழக்கமாக, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், முகூர்த்த சீசனையொட்டி, பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
இதையொட்டி, மல்லி, செண்டுமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டை சாகுபடி செய்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'குறுகிய காலத்தில், முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, கோழிக்கொண்டை சாகுபடி செய்கிறோம். ஏக்கருக்கு, 3 ஆயிரம் கிலோ வரை மலர் அறுவடை செய்யலாம்,' என்றனர்.