/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.50 ஆயிரம் கோடி கூடுதல் இலக்கு நோக்கி ஏற்றுமதியாளர் பயணம் ரூ.50 ஆயிரம் கோடி கூடுதல் இலக்கு நோக்கி ஏற்றுமதியாளர் பயணம்
ரூ.50 ஆயிரம் கோடி கூடுதல் இலக்கு நோக்கி ஏற்றுமதியாளர் பயணம்
ரூ.50 ஆயிரம் கோடி கூடுதல் இலக்கு நோக்கி ஏற்றுமதியாளர் பயணம்
ரூ.50 ஆயிரம் கோடி கூடுதல் இலக்கு நோக்கி ஏற்றுமதியாளர் பயணம்
திருப்பூர் பங்களிப்பு உயர்வு
நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 55 சதவீதமாக இருந்து வந்த, திருப்பூர் நிறுவனங்களின் பங்களிப்பு, கடந்த நிதியாண்டில், 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பின்னலாடை உற்பத்தி கேந்திரம் என்ற அந்தஸ்தை திருப்பூர் மீண்டும் மெருகேற்றியுள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் கைகொடுக்கும்
போட்டி வர்த்தகத்தில் எப்போதும் இளைப்பாறுதலே கிடையாது. திருப்புமுனையாக, எட்டாண்டு கால முயற்சியால், பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. விரைவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உருவம் பெறும்போது, திருப்பூருக்கான வர்த்தக வாய்ப்பு பிரகாசமாக மாறும். எனவே, வர்த்தகத்தை மென்மேலும் விரிவாக்கம் செய்யவே, திருப்பூரின் ஒவ்வொரு நிறுவனங்களும் களமிறங்கப்போகின்றன.
இலக்கு நிர்ணயம்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில் சாதனை படைத்த திருப்பூர், சோதனைகளை வென்று, அபாரமான வெற்றியை ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னோடி 'கிளஸ்டர்' என்ற பெருமையை பெற்றுள்ளது.