/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நால்ரோட்டில் இடிபாடு சீரமைக்க எதிர்பார்ப்பு நால்ரோட்டில் இடிபாடு சீரமைக்க எதிர்பார்ப்பு
நால்ரோட்டில் இடிபாடு சீரமைக்க எதிர்பார்ப்பு
நால்ரோட்டில் இடிபாடு சீரமைக்க எதிர்பார்ப்பு
நால்ரோட்டில் இடிபாடு சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 12, 2025 11:05 PM

பல்லடம்; பல்லடம் நால் ரோடு சிக்னலில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள இடிபாடுகளை சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடத்தில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் நால்ரோடு சிக்னல் , வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாகும்.
இங்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவிநாசி செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள டிவைடரால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது, இதை, ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில், டிவைடரின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது. இதனையடுத்து, இடிக்கப்பட்ட பகுதியில் உள்ள இடிபாடுகள் சீரமைக்கப்படாமல், ரோடு கரடு முரடாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த இடம் என்பதால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சிக்னலில், ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.