/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பராமரிப்பில்லாத பாலம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு பராமரிப்பில்லாத பாலம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
பராமரிப்பில்லாத பாலம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
பராமரிப்பில்லாத பாலம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
பராமரிப்பில்லாத பாலம் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 23, 2025 09:53 PM
உடுமலை : உடுமலை அருகே, கால்வாய் பாலம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தில், பி.ஏ.பி., மற்றும் ஏழு குள பாசனத்திட்டத்தில், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, கரும்பு அதிகளவு இப்பகுதியில் பயிரிடப்பட்டு, வெல்லம் தயாரித்து, விவசாயிகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
விளைநிலங்களிலிருந்து பி.ஏ.பி., உடுமலை கால்வாயை கடந்து திருமூர்த்திமலை ரோடு வழியாக தங்கள் வாகனங்களில், விளைபொருட்களை விவசாயிகள் எடுத்து வருகின்றனர். கால்வாயை கடப்பதற்காக, 8வது கி.மீ.,ல் 1965ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல், வலுவிழந்து வருகிறது. பாலத்தின் இரு நுழைவாயில்களிலும் தடுப்பு சுவர்கள் உடைந்து காணப்படுகிறது.
இதனால், பாலத்தின் வழியே விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. விவசாயிகள் பல கி.மீ., துாரம் சுற்றி, விளைபொருட்களை எடுத்து சென்று வருகின்றனர்.
பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.