/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒரிஜினல் நாட்டுக்கோழி பயனாளிகள் எதிர்பார்ப்பு ஒரிஜினல் நாட்டுக்கோழி பயனாளிகள் எதிர்பார்ப்பு
ஒரிஜினல் நாட்டுக்கோழி பயனாளிகள் எதிர்பார்ப்பு
ஒரிஜினல் நாட்டுக்கோழி பயனாளிகள் எதிர்பார்ப்பு
ஒரிஜினல் நாட்டுக்கோழி பயனாளிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 21, 2025 02:06 AM
பொங்கலுார்: தமிழக அரசு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க ஏழை மகளிருக்கு பட்ஜெட்டில் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு ஏராளமான குஞ்சுகள் தேவைப்படும் என்பதால் ஒரிஜினல் நாட்டுக் கோழி குஞ்சுகளை போதுமான அளவு உற்பத்தி செய்வது சிரமம்.
கடந்த காலங்களில் வழங்கியதைப் போல டூப்ளிகேட் நாட்டுக்கோழி அதாவது கிராஸ் நாட்டுக்கோழி குஞ்சுகள் மட்டுமே வழங்கப்படும் என்ற தகவல் பரவியுள்ளது. ஒரிஜினல் நாட்டுக்கோழிகள் எட்டு மாதம் வரை வளர்த்தால் தான் விற்பனை செய்ய முடியும். கிராஸ் நாட்டுக்கோழிகள் ஒரிஜினலை போல இருந்தாலும் வியாபாரிகள் எளிதாக கண்டறிந்து விடுவர். ஒரிஜினல் கோழி கிலோ, 600 ரூபாய் வரை விலை போகிறது.
ஆனால், கிராஸ் கோழிகள் பாதி விலைக்குக் கூட வியாபாரிகள் கேட்பதில்லை. இதனால் தீவனச் செலவு அதிகரித்து அதை வளர்க்கும் பயனாளிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
கிராஸ் கோழிகளை வழங்காமல் ஒரிஜினல் நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.