/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எதிர்பார்ப்புகள் - 2: மாணவியருக்கு பஸ் வசதிஎதிர்பார்ப்புகள் - 2: மாணவியருக்கு பஸ் வசதி
எதிர்பார்ப்புகள் - 2: மாணவியருக்கு பஸ் வசதி
எதிர்பார்ப்புகள் - 2: மாணவியருக்கு பஸ் வசதி
எதிர்பார்ப்புகள் - 2: மாணவியருக்கு பஸ் வசதி
ADDED : ஜூன் 25, 2024 12:37 AM
அவிநாசி அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், பஸ் வசதி கேட்டு மனு அளித்தனர். மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:
வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், அவிநாசி அரசு பள்ளியில் படிக்கின்றனர். வேலம்பாளையம் - அவிநாசி இடையே இயக்கப்பட்ட 29ம் எண் அரசு பஸ், கொரோனாவுக்கு பின் நிறுத்தப்பட்டுவிட்டது.
காலை நேரம் ஏராளமான தொழிலாளர் பயணிக்கும் நிலையில், புத்தகப்பையுடன் நெரிசலில் பயணிக்கமுடியாமல், மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். பஸ் வசதி இல்லாததால், அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்கவேண்டியுள்ளது; கல்வியும் பாதிக்கப்படுகிறது. வேலாயுதம்பாளையம் வழியாக அவிநாசிக்கு 29 எண் கொண்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.