/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு
பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு
பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு
பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு
ADDED : செப் 24, 2025 12:18 AM

திருப்பூர்; வட கிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மேற்கு மலைத் தொடர்ச்சி மாலை அமைந்துள்ள மாவட்டங்களில் அதிகம் கைகொடுப்பதாக உள்ளது. அவ்வகையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான மானாவாரி நிலம் கொண்டுள்ள விவசாயிகள் இந்த மழையை எதிர்பார்த்து பல்வேறு மானாவாரி பயிர்களை இந்த நிலங்களில் பயிரிடுவர். இதில் நிலக்கடலை, மஞ்சள் சோளம், வெள்ளை சோளம், ராகி, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்கள், தீவனப் பயிர்கள் பயிரிடுவர். இப்பயிர் வகைகள் அந்தந்த காலத்துக்கேற்ப பயிரிடப்படும்.
தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கும் என்பதால் சோளம் பயிரிடப்படுகிறது. இதற்காக விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணியை பல இடங்களிலும் விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
நுாறு நாள் பயிர் என்ற அளவில், சோளம் ஜன., மாதம் அறுவடைக்கு தயாராகி விடும். பெரும்பாலான நிலங்களை உழவு செய்து பண்படுத்தி பயிர்கள் விதைக்கப்படும். அவ்வகையில், தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில், சோளம் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளன.