/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கால் நுாற்றாண்டு கடந்தாலும் கரும்பாக நினைவுகள்!கால் நுாற்றாண்டு கடந்தாலும் கரும்பாக நினைவுகள்!
கால் நுாற்றாண்டு கடந்தாலும் கரும்பாக நினைவுகள்!
கால் நுாற்றாண்டு கடந்தாலும் கரும்பாக நினைவுகள்!
கால் நுாற்றாண்டு கடந்தாலும் கரும்பாக நினைவுகள்!
ADDED : ஜன 29, 2024 12:07 AM

திருப்பூர்;திருப்பூர், வீரபாண்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கடந்த, 1998 - 1999 கல்வியாண்டில் படிப்பை முடித்த மாணவர்கள், அப்போது பணிபுரிந்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ' 1998ம் ஆண்டு கற்றோர் கற்பித்தோர் சங்கமம்' என்ற தலைப்பில் நேற்று நடந்தது.
நினைவுகளை மீண்டும் நிஜமாக்க அப்போது பள்ளியில் ஆசிரியர்களுடன் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோக்கள் மேடையில் அனைவரின் பார்வைக்கும் மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தியிருந்தனர். அன்றைய குழந்தை பருவ முகங்களை தேடி கண்டுபிடித்து, 'இங்க பாரு, இது தான் நான், இதுதான் நீ' என ஒவ்வொருவரும் குழந்தையாக மாறி, ஒருவரை ஒருவர் தேடி குதுாகலித்தனர்.
நிகழ்ச்சிக்கு 54வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர்கள் குருசாமி, ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஆசிரியர்கள் பங்கஜம், செல்வமணி, சிவகாமி, தற்போது பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பத்து பேர் பங்கேற்றனர்; முன்னாள் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின் தங்கள் ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள், அன்பால் அனுபவங்களை பகிர்ந்து, நலம் விசாரித்து, பிரியாவிடை பெற்றுச் சென்றனர். யுவராஜன் பிரபு, பிரேம், சிஜூ ராஜேஷ், ரேவதி, சண்முகப்பிரியா, மகேந்திரன், ேஹமா ஒருங்கிணைத்தனர். முன்னதாக, பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கேடயம் வழங்கி கவுரவித்தனர்.