/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பள்ளியில் கருத்தரங்கம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பள்ளியில் கருத்தரங்கம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பள்ளியில் கருத்தரங்கம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பள்ளியில் கருத்தரங்கம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பள்ளியில் கருத்தரங்கம்
ADDED : மார் 24, 2025 10:59 PM

உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை மற்றும் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
ஆசிரியர் கணேச பாண்டியன் தலைமை வகித்தார். ஆசிரியர் சுபத்ரா வரவேற்றார். 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில், தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் பேசினார்.
தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் சரவணன், சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவி ஹஸ்தா பேசினார்.
தொடர்ந்து புறத்துாய்மையின் அவசியம் குறித்து, ஆசிரியர் ரேணுகாதேவி பேசினார். மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடந்தது.
சிட்டுக்குருவிகள் மற்றும் பறவை இனங்களை பாதுகாக்க வேண்டுமென மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சண்முகவேல் நன்றி தெரிவித்தார்.