/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 09, 2025 12:14 AM
திருப்பூர்; திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய மாணவர் படை, சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் லட்சுமிபிரபா வரவேற்றார். மாநகராட்சி நகர்ப்புற நல வாழ்வு மைய டாக்டர் பரமேஸ்வரன், பாலிதீன் தீமை குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் மன்னர் திப்புசுல்தான், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விளக்கினார். ஓவியம், கட்டுரை, காதிதப்பை தயாரித்தல் உள்ளிட்ட போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. கணித ஆசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், உதவி பொறியாளர் சங்கநாராயணன் மாணவ, மாணவியரோடு இணைந்து மரக்கன்று நட்டனர்.