/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழில்முனைவோர் உருவாக்கும் 'அமுதசுரபி' தொழில்முனைவோர் உருவாக்கும் 'அமுதசுரபி'
தொழில்முனைவோர் உருவாக்கும் 'அமுதசுரபி'
தொழில்முனைவோர் உருவாக்கும் 'அமுதசுரபி'
தொழில்முனைவோர் உருவாக்கும் 'அமுதசுரபி'

இலவச உணவு, தங்கும் விடுதி
இதன் இயக்குனர் சதீஷ்குமார் நம்முடன் பகிர்ந்தவை:
64 துறைகளில் பயிற்சி
அதிக வேலைவாய்ப்புள்ள பயிற்சிகளான, மொபைல் போன் சர்வீஸ், வீட்டு உபயோக மின்சாதனங்கள் சர்வீஸ், நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி, கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, நவீன உட்புற மற்றும் மர வடிவமைப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி, இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் பயிற்சி, அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் மற்றும் பேப்ரிகேஷன் பயிற்சி மற்றும் பிற தொழில் சார்ந்த பயிற்சிகள் மற்றும் விவசாய பயிற்சிகள் என 64 துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அனுபவப் பயிற்றுனர்க ள்
தற்போது சீருடை, பாடப்பொருள், தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சிகளை உரிய தொழில் சார்ந்த அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் நடத்துகின்றனர். பயிற்சி காலத்தில், தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றி கதைகள் விளக்கப்படுகின்றன.
மானிய கடனுதவி
இளைஞர்களை குழுவாக அழைத்துச் சென்று சந்தை ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த இளைஞர்கள் சுய வேலைவாய்ப்புக்காக கடன் தேவைப்படும் நிலையில், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் அரசு மானியத்துடன் கூடிய கடன் பெறவும் ஏற்பாடு செய்யப்படும். சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.
இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்
இம்மையம் துவங்கியது முதல், இதுவரை, 12,371 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இதுவரை, 404 சிறுதொழில் மற்றும் விவசாய பயிற்சிகள் நடந்துள்ளது. இவர்களில், 8,438 பேர் சுயதொழில் துவங்கி செய்து வருகின்றனர்.