ADDED : செப் 15, 2025 11:51 PM

திருப்பூர்; திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில், பொறியாளர் தினம், மங்கலம் ரோட்டில் உள்ள சங்க அலுவலத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு, சங்க தலைவர் குமார் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். பொருளாளர் சதீஷ்பாபு, முன்னாள் மாநில பொருளாளர் ரமேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர் தில்லைராஜன் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் பொன்னுசாமி, பட்டய தலைவர் சிதம்பரம், முன்னாள் நிர்வாகிகள் கலைச்செல்வன், சண்முகராஜ், ரத்னசபாபதி, மணிகண்டன், முரளி, ஸ்டாலின் பாரதி, ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.