/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்புபணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்பு
பணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்பு
பணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்பு
பணியாளர்கள் விடுப்பு போராட்டம்; பணி பாதிப்பு
ADDED : ஜன 31, 2024 12:04 AM

உடுமலை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் விடுப்பு போராட்டத்தில், தாலுகா அலுவலகத்தில், பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.
அரசுத்துறைகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், மாவட்ட தலைநகரங்களில், மறியல் போராட்டத்தில், ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்காக, தாலுகா அளவிலான அலுவலர்கள், விடுப்பு எடுத்துச்சென்றதால், பல்வேறு அரசுத்துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, வருவாய்த்துறையில், தாலுகா அலுவலக பணியாளர்கள் 18; வி.ஏ.ஓ., 32; கிராம உதவியாளர் 3 உள்ளிட்டோர் விடுப்பு எடுத்தனர். இதனால், உடுமலை தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.