/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மின் கட்டண உயர்வு; 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்மின் கட்டண உயர்வு; 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு; 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு; 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு; 'நாம் தமிழர்' ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 12:23 AM

அனுப்பர்பாளையம்;தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் முன், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகசுந்தரம், ஈஸ்வரன், சுப்பிரமணியம், ரமேஷ், இளைஞர் பாசறை செயலாளர் சேக், மண்டல செயலாளர் வேலுசாமி, மாவட்ட தலைவர் ரத்னா மனோகர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
திருப்பூர் அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துரத்தினம், கோவை ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், மெர்ச்சன்டைசர் கூட்டமைப்பு சங்க தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தொழில் அமைப்பினரும் பங்கேற்றனர்.
கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
----
திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு, 'நாம் தமிழர்' கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.