/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில் வழித்தட பாதைகளில் மின் இணைப்பு பரிசோதனை ரயில் வழித்தட பாதைகளில் மின் இணைப்பு பரிசோதனை
ரயில் வழித்தட பாதைகளில் மின் இணைப்பு பரிசோதனை
ரயில் வழித்தட பாதைகளில் மின் இணைப்பு பரிசோதனை
ரயில் வழித்தட பாதைகளில் மின் இணைப்பு பரிசோதனை
ADDED : ஜூன் 26, 2025 11:53 PM
திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்ம் மேற்கில் இருந்து கிழக்கு பகுதி வரை சப்-லைனில் (மாற்றுப்பாதையில்) மின் இணைப்புகள் எவ்வாறு உள்ளன, ஏதேனும் பழுதுகள் உள்ளதா, இணைப்புகளில் விரிசல் உள்ளதா என்பது குறித்து பொறியியல் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மின்பராமரிப்பு வாகனம் மூலம் பத்தடி ஒரு இடத்தில், மின்கம்பங்கள் உள்ள இடத்தில் மெயின்லைன் (ஈரோடு - திருப்பூர்- கோவை) வழித்தட பாதையில் இருந்து, ஸ்டேஷனில் இருந்து வரும் இணைப்புகள் பரிசோதிக்கப்பட்டது.
மின்பராமரிப்பு பொறியியல் அதிகாரிகள் கூறுகையில், '99 சதவீதம் மின் மயமாக்கப்பட்ட ரயில்கள் மட்டும் இயங்குவதால், ரயில்கள் இயக்கம் சீராக இருக்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் மின் இணைப்புகள் பரிசோதிக்கப்படுகிறது; ஊத்துக்குளி வரை இப்பணிகள் நடக்கும்,' என்றனர்.