/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பொங்கல் பரிசு பெற முதியோர் அலைக்கழிப்புபொங்கல் பரிசு பெற முதியோர் அலைக்கழிப்பு
பொங்கல் பரிசு பெற முதியோர் அலைக்கழிப்பு
பொங்கல் பரிசு பெற முதியோர் அலைக்கழிப்பு
பொங்கல் பரிசு பெற முதியோர் அலைக்கழிப்பு
ADDED : ஜன 13, 2024 01:52 AM
பல்லடம்;ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. கைரேகையை கொண்டு முதியவர்கள் பொங்கல் பரிசு பெறுகின்றனர். கைரேகை விழாததால் சிக்கல் ஏற்படுகிறது.
ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டதற்கு, 'கைரேகை விழாத வயதானவர்களிடம் கையொப்பம் பெற்று பொருட்கள் வழங்கி வந்தோம். ஆனால், முறைகேடு நடக்கலாம் என்பதால், கைரேகை விழாதவர்களுக்கு இப்போது வழங்க வேண்டாம் என, துறை ரீதியாக உத்தரவிடப்பட்டது எனவே, கைரேகை விழாதவர்களை திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
பல்லடம் கூட்டுறவு சங்க பதிவாளர் சாந்தியிடம் கேட்டதற்கு, 'குழப்பம் ஏற்படும் என்பதால், கைரேகை விழாதவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பொருட்கள் வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 14ம் தேதி (நாளை) அன்று, அரசு உத்தரவின்படி விடுபட்டவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது' என்றார்.