ADDED : ஜன 31, 2024 01:03 AM
விளையாட்டு விழா
அவிநாசி, பைபாஸ் ரோட்டிலுள்ள ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளியில், 11ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு, பள்ளி தாளாளர் விநாயகம் தலைமை வகித்தார். ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லுாரி தாளாளர் செங்குட்டுவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்களின் அணிவகுப்பை தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் ஜோதி சுடரினை ஏற்றியும், புறாவை பறக்க விட்டு விளையாட்டு போட்டிகள் துவங்கப்பட்டது.
விளையாட்டு விழாவில், மாணவர்களுக்கு தொடர் ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது. கராத்தே, யோகா போன்வற்றில் மாணவர்கள் செய்து காட்டி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். கராத்தே விளையாட்டில் சாகச நிகழ்வுகளான ஓடு உடைத்தல், ஓடுகளில் நெருப்பை எரியவிட்டு உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாக இயக்குநர் அக் ஷயா விக்ரம் சான்றிதழ் வழங்கினார்.
பெற்றோருக்கு பாதபூஜை
திருப்பூரை அடுத்த அவிநாசி - பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் அரசு பொது தேர்வு எழுதும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் நல்ல முறையில் தேர்வு எழுதி, மதிப்பெண் பெறும் வகையில், பாத பூஜை விழா நடந்தது. இதில், வெள்ளகோவிலை சேர்ந்த ஓதுவார் திருஞானசம்பந்தன் தலைமையில் பாத பூஜை விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராதாமணி, பள்ளி முதல்வர் மீனாட்சி மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.