/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விளையாட்டு... வாசிப்பு... கலைப்போட்டிகள் பள்ளிகளுக்கு கல்வித்துறை வழிகாட்டுதல் விளையாட்டு... வாசிப்பு... கலைப்போட்டிகள் பள்ளிகளுக்கு கல்வித்துறை வழிகாட்டுதல்
விளையாட்டு... வாசிப்பு... கலைப்போட்டிகள் பள்ளிகளுக்கு கல்வித்துறை வழிகாட்டுதல்
விளையாட்டு... வாசிப்பு... கலைப்போட்டிகள் பள்ளிகளுக்கு கல்வித்துறை வழிகாட்டுதல்
விளையாட்டு... வாசிப்பு... கலைப்போட்டிகள் பள்ளிகளுக்கு கல்வித்துறை வழிகாட்டுதல்
ADDED : ஜூன் 07, 2025 12:00 AM
திருப்பூர்; மாணவர்களின் மன நலன், உடல் நலன் பேண, அரசு பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது:
உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில், 30 நிமிடங்களுக்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற் கல்வி ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும்.
உடற்கல்வி பாடவேளைகள்
விளையாடுவதற்காகத் தான்
ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்துக்கு இரண்டு பாட வேளைகள், உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாட வேளையில் விளையாட வைக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும், கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை, ஒன்பது வகுப்பு மற்றும், 10ம் வகுப்பு, பிளஸ், 1 வகுப்பு மற்றும் பிளஸ்,2 வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியே கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ள செய்ய வேண்டும்.
காலை வணக்க கூட்டம்
நடைபெறுதல் கட்டாயம்
தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் முன்னிலையில் காலை வணக்கம் கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்க கூட்டத்தில், மாணவர்களை தவறாமல் கலந்து கொள்ள செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் கூட்டத்தில், 6 முதல், 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள், பேச்சு, கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு உள்ளிட்டவை இடம்பெறுதல்வேண்டும்.
காலை உணவு திட்டத்தில்
தரமான உணவு அவசியம்
முதலமைச்சர் காலை உணவு திட்டம் அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும், தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும். மதிய உணவு இடைவெளி முடிந்த பின்பு, 20 நிமிடம், 5ம் பாடவேளை ஆசிரியர்கள் வாயிலாக, மாணவர்கள், சிறார் பருவ இதழ், செய்தித்தாள், பள்ளி நுாலகத்தில் உள்ள நுால்கள் போன்றவற்றை வாசிக்க செய்ய வேண்டும் என, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன