ADDED : பிப் 06, 2024 01:47 AM
உடுமலை;உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாளை நடக்கிறது. மின்நுகர்வோர் தங்களின் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கவும், அதற்கு நிவர்த்தி காணவும், மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை (7ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.