பெற்ற தாயை கொன்ற 'போதை' மகன் கைது
பெற்ற தாயை கொன்ற 'போதை' மகன் கைது
பெற்ற தாயை கொன்ற 'போதை' மகன் கைது
ADDED : ஜூன் 15, 2025 02:04 AM
தாராபுரம்:உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயை கழுத்தறுத்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மணல் மேடு, பெருமாள் வலசை சேர்ந்தவர் மாரியம்மாள், 65. இவரது மகன் ராஜகோபால், 42; கட்டட தொழிலாளி. ஓராண்டாக மாரியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள மாரியம்மாளின் சகோதரி, வாரத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து அவரை குளிக்க வைத்து, வீட்டை சுத்தம் செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல அவரை குளிக்க வைக்க, கட்டிலுடன் வெளியே படுக்க வைத்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது போதையில் இருந்த ராஜகோபால், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து, தாயை கழுத்தறுத்து கொலை செய்தார். மூலனுார் போலீசார் ராஜகோபாலனை கைது செய்தனர்.