/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வந்தாச்சு!பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வந்தாச்சு!
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வந்தாச்சு!
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வந்தாச்சு!
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வந்தாச்சு!
ADDED : ஜன 04, 2024 09:06 PM

உடுமலை;உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயனாளிகளுக்கு வழங்க வேட்டி, சேலைகள் வரத்துவங்கியுள்ளன.
தமிழக அரசு சார்பில், பொங்கல் பண்டிகைக்கு வருவாய்த்துறை, ரேஷன் கடைகள் வாயிலாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர், ஏ.ஏ.ஒய்., கார்டு மற்றும் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, வழங்க தாலுகா வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு, அவை வரத்துவங்கியுள்ளன.
தாலுகாவிலுள்ள, முழு நேரம், பகுதி நேரம் என, 1,135 ரேஷன் கடைகள் வாயிலாக, 66 ஆயிரம் வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
அரசு ஒதுக்கீடு செய்துள்ள வேட்டி, சேலைகளை முழுமையாக பெற்று, பொதுமக்களை அலைக்கழிக்காமல், வி.ஏ.ஓ.,க்கள், ரேஷன் கடைகள் வாயிலாக உடனடியாக வினியோகிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.