/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இரட்டையர் இறகுப்பந்து; தி.கோடு அணி வெற்றி இரட்டையர் இறகுப்பந்து; தி.கோடு அணி வெற்றி
இரட்டையர் இறகுப்பந்து; தி.கோடு அணி வெற்றி
இரட்டையர் இறகுப்பந்து; தி.கோடு அணி வெற்றி
இரட்டையர் இறகுப்பந்து; தி.கோடு அணி வெற்றி
ADDED : செப் 08, 2025 11:15 PM

அவிநாசி; அவிநாசி நண்பர்கள் இறகு பந்து கழகம் சார்பில், 'பியூர் நான் மெடலிஸ்ட்' இரட்டையர் இறகு பந்து போட்டி பன் அண்ட் ப்ரோலிக் உள் விளையாட்டரங்கில் நடந்தது.
ஈரோடு, கோபி, சேலம், கரூர், திருப்பூர், உடுமலை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, 40 அணி வீரர்கள் பங்கேற்றனர். நண்பர்கள் இறகு பந்து கழகத் தலைவர் ராமசாமி, பொருளாளர் ஸ்ரீ கண்டன், செயலாளர் சையது முகமது, திருப்பூர் மாவட்ட இறகு பந்து கழக செயலாளர் மோகன்குமார் ஆகியோர் இறுதி போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இறுதி போட்டியில் முதலிடம் பெற்ற திருச்செங்கோடு மகாலிங்கம், ஹனீஷ், இரண்டாமிடம் பெற்ற உடுமலை சுசீந்தர், ஷம்சித், மூன்றாமிடம் பெற்ற அவிநாசி டாக்டர் கார்த்திக் ஆகியோருக்கு, அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.