Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேர்வு நெருங்கும் போது செய்யக்கூடாதவை...

தேர்வு நெருங்கும் போது செய்யக்கூடாதவை...

தேர்வு நெருங்கும் போது செய்யக்கூடாதவை...

தேர்வு நெருங்கும் போது செய்யக்கூடாதவை...

ADDED : பிப் 23, 2024 08:32 PM


Google News
தேர்வு நெருங்கும் சமயத்தில், நம் உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பதும் நல்லது.

பொதுவாக, கிராமப்புற மாணவர்கள், கிணற்றில் 'டைவ்' அடித்து குதித்து குளிப்பது, மரம் ஏறுவது, முள் வெட்டுவது மற்றும் விறகு வெட்டுவது போன்ற சில காரியங்களில் வழக்கமாக ஈடுபடுவர்.அவை, அந்த மாணவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எதிர்பாராத சில நேரங்களில், அத்தகைய செயல்களில், விபத்துக்களும் நேர்வதுண்டு. எனவே, தேர்வின்போது, அதுபோன்ற செயல்களை (அவை வழக்கமான ஒன்றாக இருப்பினும்கூட) தயவுசெய்து சில நாட்களுக்கு ஒத்தி வைக்கவும். தேர்வு முடிந்த பின், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளவும்.

கிராமப்புற மாணவர்கள் தவிர, நகர்ப்புற மாணவர்களும் சேர்ந்து, வேறுசில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏதேனும் வேலை செய்தல், பைக்கில் சாகச பயணம் அல்லது வேகமாக செல்லுதல், நெருப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல், தேவையற்ற அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும். ஏனெனில், தேர்வின்போது, கண்களும், கைகளும் மிக முக்கியமானவை. உங்களின் நடவடிக்கைகளால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமானால், அது தேர்வையே பாதித்துவிடும். உங்களின் விரல் நகங்களை, பிளேடு பயன்படுத்தாமல், நகவெட்டிக் கொண்டு வெட்டி, துாய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us