Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டாக்டர் பரிந்துரை இன்றி இருமல் மருந்து கூடாது

டாக்டர் பரிந்துரை இன்றி இருமல் மருந்து கூடாது

டாக்டர் பரிந்துரை இன்றி இருமல் மருந்து கூடாது

டாக்டர் பரிந்துரை இன்றி இருமல் மருந்து கூடாது

ADDED : அக் 18, 2025 11:32 PM


Google News
'கோ ல்ட்ரிப்' இருமல் மருந்து உட்கொண்டு, குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உஷாராகி, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகிகளுக்கு 'கோல்ட்ரிப்' மருந்து விவகாரம் தொடர்பாக, விரிவான உத்தரவுகளை வழங்கியது.

'இருமல் மருந்து மட்டுமின்றி பொதுவாக மருந்துகள் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு என்றால், உடனடியாக டாக்டர்களை நாடி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசி நேரம் வரை காத்திருந்து பதட்டம் அடையக் கூடாது,' என்கின்றனர், மருத்துவர்கள்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, குழந்தை நலத்துறை இணை பேராசிரியர், டாக்டர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ''டாக்டரின் மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் பெறுவது தவறு.

ஒவ்வொரு குழந்தையின் இருமலுக்கு பல காரணங்கள் இருக்கும். அவர்களின் உடல் நிலையை முழுமையாக பரிசோதிக்கும் டாக்டர்கள், அவ ற்றை முழுமையாக அறிந்து, அதற்கேற்ப சரியான மருந்துகளை பரிந்துரைப்பர். எனவே, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்தை வாங்கி, குழந்தைகளுக்கு பெற்றோர் தர வேண்டாம்.

அதே போல், சளி, இருமல் அதிகமாகும் வரை காத்திருக்காமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால், பயமில்லை. பதட்டமும் இல்லை'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us