ADDED : மே 12, 2025 03:39 AM
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்டம், வடக்கு மாநகரம் பாண்டியன் நகர் கிளை தி.மு.க., சார்பில், வாவிபாளையத்தில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் ஜோதி வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் ஜெய்னுலாப்தின், நடராஜ் ஆகியோர் பேசினர். கவுன்சிலர்கள், பூத் ஏஜன்ட்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.