/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மெழுகுவர்த்தி ஏந்தி தே.மு.தி.க.,வினர் அஞ்சலி மெழுகுவர்த்தி ஏந்தி தே.மு.தி.க.,வினர் அஞ்சலி
மெழுகுவர்த்தி ஏந்தி தே.மு.தி.க.,வினர் அஞ்சலி
மெழுகுவர்த்தி ஏந்தி தே.மு.தி.க.,வினர் அஞ்சலி
மெழுகுவர்த்தி ஏந்தி தே.மு.தி.க.,வினர் அஞ்சலி
ADDED : ஜூன் 13, 2025 11:35 PM

அனுப்பர்பாளையம்; தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த 'படை தலைவன்' சினிமா வெளியானது.
திருப்பூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சக்தி தியேட்டரில், இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தே.மு.தி.க.,வினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
முன்னதாக, கட்சியினர் ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, விஜயகாந்த் படத்துக்கு, கட்சியினர் மாலை அணிவித்து மலர்கள் துாவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், பகுதி செயலாளர்கள் உதயபிரபு, சண்முகராஜா, ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கருப்பசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.