/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கடிதம் எழுதியே காலம் தள்ளும் தி.மு.க., கடிதம் எழுதியே காலம் தள்ளும் தி.மு.க.,
கடிதம் எழுதியே காலம் தள்ளும் தி.மு.க.,
கடிதம் எழுதியே காலம் தள்ளும் தி.மு.க.,
கடிதம் எழுதியே காலம் தள்ளும் தி.மு.க.,
ADDED : ஜூலை 02, 2025 11:59 PM

பல்லடம்; கடிதம் எழுதியே காலம் தள்ளி வருவதாக, தி.மு.க., அரசை, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து விமர்சித்துள்ளார்.
இது குறித்து, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், அவர் அளித்த பேட்டி:
விவசாயிகளின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் அவற்றை செய்யுமா? என்ற கேள்வி உள்ளது. மாமரம் நட்டவர்களும் கடனிலும், வெங்காயம், தக்காளி நட்டவர்கள் ரோட்டிலும் நிற்கின்றனர். கட்டுப்படியாகாத விலை காரணமாக விவசாயிகள் தொடர்ந்து கடனாளி வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகா மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அந்த அரசுக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த தன் பயனாக, விவசாயிகளுக்கு மானியம் கிடைத்தது. ஆனால், தி.மு.க., அரசுக்கு, விவசாயிகளின் நலன் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லை. எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவது மட்டுமே இந்த அரசுக்கு தெரியும். தங்களுக்கு தேவை என்றால், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்திப்பர். ஆனால், ஒருபோதும் விவசாயிகளின் நலனுக்காக சந்தித்தது கிடையாது.
பல ஆண்டுகளாக காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது ஆனைமலையாறு- நல்லாறு திட்டம். கடந்த ஆட்சியில், இத்திட்டம் தொடர்பாக பேச்சு நடந்தது. தற்போதைய ஆட்சியில் அதுவும் இல்லை. போதை பழக்கம் என்பது, இன்று பள்ளிகளிலேயே துவங்கி விடுகிறது.
ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் மெத்தனமே இதற்கு காரணம். இதன் விளைவாகவே, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.