/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்ரீராமரை கேலி செய்த தி.மு.க., நிர்வாகி நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் புகார்ஸ்ரீராமரை கேலி செய்த தி.மு.க., நிர்வாகி நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் புகார்
ஸ்ரீராமரை கேலி செய்த தி.மு.க., நிர்வாகி நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் புகார்
ஸ்ரீராமரை கேலி செய்த தி.மு.க., நிர்வாகி நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் புகார்
ஸ்ரீராமரை கேலி செய்த தி.மு.க., நிர்வாகி நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : ஜன 24, 2024 10:58 PM
திருப்பூர்:அயோத்தி ஸ்ரீராமரை கேலிசெய்து, பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட திருப்பூரை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, உலகமே திரும்பி பார்க்கும்வகையில் கடந்த 22 ம் தேதி, மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில், அயோத்தி ராமரின் முகத்துக்குபதில், நடிகர் வடிவேலு முகத்தை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்துள்ளார். இச்செயலுக்கு, ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, எஸ்.பி., சாமிநாதனிடம் நேற்று அளித்த புகார் மனு:
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
தி.மு.க.,வை சேர்ந்தவர், 'பொன்னைய்யர் திருப்பூர் பொன்னைய்யர்' என்கிற பேஸ்புக் பக்கத்தில், அயோத்தி ஸ்ரீராமரின் திருவுருவத்தில், நடிகர் வடிவேலு முகத்தை மார்பிங் செய்து, 'ஜெய் வடிவேல் ராம' என்கிற தலைப்பில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் இந்து கடவுள் ஸ்ரீராமரை, இதுபோன்று கேலி செய்யும்வகையில் புகைப்படம் வெளியிட்டிருப்பது, கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. தனிநபர் ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது வேறு; கடவுளை இழிவுபடுத்துவது என்பது வேறு.
ஹிந்து கடவுள் ஸ்ரீராமரை களங்கப்படுத்திய, திருப்பூரை சேர்ந்த தி.மு.க., பிரமுகரை கண்டுபிடித்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்து உள்ளார்.