/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அடிப்படை வசதி கேட்டுதி.மு.க., நிர்வாகிகள் மனு அடிப்படை வசதி கேட்டுதி.மு.க., நிர்வாகிகள் மனு
அடிப்படை வசதி கேட்டுதி.மு.க., நிர்வாகிகள் மனு
அடிப்படை வசதி கேட்டுதி.மு.க., நிர்வாகிகள் மனு
அடிப்படை வசதி கேட்டுதி.மு.க., நிர்வாகிகள் மனு
ADDED : ஜூன் 01, 2025 07:19 AM
திருப்பூர் : திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., செயலாளர் தங்கராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, நாகராஜ், சம்பத்குமார் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் உள்ள வார்டுகளில், மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ரோடு பணிகள், தெரு விளக்கு, வடிகால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவையான பகுதிகளில் மேற்கொள்ளவேண்டும். குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்து இணைப்புகள் வழங்க வேண்டும். குழாய் பதிப்பு பணிக்கு தோண்டிய குழிகளை மூடி ரோடுகள் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
மனு கொடுக்கும் நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகளுடன் வடக்கு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ராமமூர்த்தியும் பங்கேற்றார்.