/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
ADDED : செப் 11, 2025 09:26 PM
உடுமலை; திருப்பூர் மாவட்ட அளவில், ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி இரண்டு நாட்கள் நடந்தது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு கல்வியாண்டுதோறும் பருவம் வாரியாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்க மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கவுசல்யாதேவி வரவேற்றார்.
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் தலைமை வகித்தார். துணை முதல்வர் விமலாதேவி, முதுநிலை விரிவுரையாளர்கள் ராஜன், சுப்ரமணி முன்னிலை வகித்தனர்.
தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறவியல் பாடங்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள மாற்றங்கள், மாநில அடைவு ஆய்வு வினாக்கள், செயல்பாடுகள், சிறந்த நடைமுறைகள், வகுப்பறை செயல்பாடுகள், தொழில்நுட்ப சாதனங்களை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் சரவணக்குமார், சுகுணா, மூலனுார் வட்டார ஆசிரியர் பயிற்றுநர் சக்திவேல் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், 30 பேர் பங்கேற்றனர்.