ADDED : பிப் 12, 2024 01:05 AM
திருப்பூர்;கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு திரு முருகன்பூண்டி மண்டலம் மற்றும் திருப்பூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
திருமுருகன் பூண்டி 'டேமூன்' ரெஸ்டாரண்டில் நடந்த இப்போட்டியை, நீலகிரி மாவட்ட தேர்தல் இணை பொறுப்பாளர் கதிர்வேல் மாணிக்கம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 175 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி 9, 12, 15 வயது பிரிவுகளில், ஆண், பெண் என 6 பிரிவுகளாக நடந்தது.
வெற்றி பெற்றோருக்கு பரிசளிக்கப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் சுந்தரன் முன்னிலை வகித்தார். முன்னதாக மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் நந்தகுமார், துணைத் தலைவர் சாந்தி, அவிநாசி வடக்கு ஒன்றிய சண்முகபாபு, மாவட்ட விளையாட்டு பிரிவு துணைத்தலைவர் அர்ஜூனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.