/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாவட்ட தடகள போட்டி; முத்திரை பதித்த மாணவர்கள் மாவட்ட தடகள போட்டி; முத்திரை பதித்த மாணவர்கள்
மாவட்ட தடகள போட்டி; முத்திரை பதித்த மாணவர்கள்
மாவட்ட தடகள போட்டி; முத்திரை பதித்த மாணவர்கள்
மாவட்ட தடகள போட்டி; முத்திரை பதித்த மாணவர்கள்
ADDED : செப் 09, 2025 09:58 PM
- நமது நிருபர் -
திருப்பூரில் நடந்த மாவட்ட தடகள போட்டியில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் தடகள சங்கம் சார்பில், 7வது ஆண்டு திருப்பூர் தடகள திருவிழா சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டியை கொங்கு நகர் உதவி கமிஷனர் கணேசன் பங்கேற்று துவக்கி வைத்தார். திருப்பூர் தடகள சங்க தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் மோகன் கார்த்தி, ஜெயபிரகாஷ், செயலாளர் முத்துக்குமார், இணை செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
100, 200, தொடர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம் என, பல விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளை, 60 பேர் வழிநடத்தினர்.
டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் மனோகர் செந்துார்பாண்டி, சிவசக்தி ஆகியோர் நன்றி கூறினர்.
மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, முதல், நான்கு இடம் பிடித்தவர்கள் வரும் 19ல் செங்கல்பட்டில் நடக்கும் மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.