/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடு தோறும் வினியோகம் தீவிரம்வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடு தோறும் வினியோகம் தீவிரம்
வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடு தோறும் வினியோகம் தீவிரம்
வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடு தோறும் வினியோகம் தீவிரம்
வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடு தோறும் வினியோகம் தீவிரம்
ADDED : பிப் 06, 2024 01:42 AM
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை தபாலில், வீடு தேடி வரத்துவங்கி விட்டது.
கடந்த ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்களாக இணைப்பதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்தாண்டு, அக்டோபரில் துவங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, தொகுதி மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டன. கடந்த ஜனவரி 22ம் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியானது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு தொகுதிகளுக்கான இறுதிப்பட்டியலில், 11 லட்சத்து 50 ஆயிரத்து 110 ஆண்கள்; 11 லட்சத்து 94 ஆயிரத்து 358 பெண்கள்; 342 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர் இடம் பெற்றுள்ளனர்.
வரைவு பட்டியலைவிட, 28 ஆயிரத்து 699 வாக்காளர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இளம் வாக்காளர்கள், ஒரே தொகுதிக்குள் இடமாற்றம், வேறு தொகுதிக்கு மாற்றம், வாக்காளர் அட்டையில் புகைப்படம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக விண்ணப்பித்து ஏற்றுக் கொள்ளப்பட்டோருக்கு, புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பலர், பழைய கார்டுகளுக்கு பதில், ஆன்லைனில் புதிய வண்ண கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், அருகாமையில் உள்ள தபால் அலுவலகம் வாயிலாக, 'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான வண்ண வாக்காளர் அட்டை, வாக்காளர்களின் வீடு தேடி செல்கிறது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், தபால்காரர்கள், வாக்காளர் அடையாள அட்டை பட்டுவாடாவில் மும்முரம் காட்டி வருகின்றனர்.