/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி' மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி'
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி'
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி'
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் விவகாரம்; விசாரணைக்குழுவினர் 'கிடுக்கிப்பிடி'

நடந்ததை சொன்ன மாற்றுத்திறனாளிகள்
சமூக ஆர்வலர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் வெங்கடேஸ்வரன், கனகராஜ் ஆகியோர், ஸ்கூட்டர் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிறப்புக்குழுவினரிடம் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய நிறுவனத்தினரும் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
சிறப்புக்குழு கேள்விகள்
குறிப்பிட்ட பயனாளி பெயரில் பதிவு செய்து ஆர்.சி., புக் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரை, பட்டியலில் கடைசி நிலையில் உள்ள வேறு மாற்றுத்திறனாளிக்கு வழங்கியது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரிடமும், ஸ்கூட்டர் நிறுவனத்தினரிடமும் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டனர்.
வீடுகளுக்கு சென்ற குழுவினர்
தொடர்ந்து, ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்ற விசாரணை அதிகாரிகள் குழுவினர், உண்மையான பயனாளிக்குதான் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா; அவரிடம் ஆர்.சி., புக் உள்ளதா; பணிக்கு செல்கிறாரா; மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டரை வேறு நபர்கள் பயன்பாட்டுக்கு கொடுத்துள்ளனரா என, ஆய்வு நடத்தினர்.