/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நகரில் வளர்ச்சி பணி: அறிக்கை தயாரிப்பு தீவிரம்!நகரில் வளர்ச்சி பணி: அறிக்கை தயாரிப்பு தீவிரம்!
நகரில் வளர்ச்சி பணி: அறிக்கை தயாரிப்பு தீவிரம்!
நகரில் வளர்ச்சி பணி: அறிக்கை தயாரிப்பு தீவிரம்!
நகரில் வளர்ச்சி பணி: அறிக்கை தயாரிப்பு தீவிரம்!
ADDED : ஜன 04, 2024 12:09 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடப்பு நிதியாண்டுக்குள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில், பெருகி வரும் புதிய குடியிருப்புகள், மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட போது இணைக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு அடிப்படை வசதிகள் முழுமை பெறாத நிலை உள்ளது. இது போன்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் உள்ளன.
வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் போது, அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பெறுவதில், சிக்கலான விதிமுறைகள் முட்டுக் கட்டையாக உள்ளது. நகரின் குறைந்தபட்சம், 20 ஆண்டு கால வளர்ச்சியைக் கணக்கிட்டு உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டி உள்ளது.
அவ்வகையில், போக்கு வரத்துக்கான ரோடுகள், நீர் நிலைகளைக் கடந்து செல்வதற்கான உயர் மட்டப் பாலங்கள், கழிவு நீர் முறையாக கொண்டு செல்வதற்கான கால்வாய்கள் என பெரிய அளவிலான திட்டங்கள் சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போதைய முக்கிய மற்றும் அவசர தேவையாக ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் வடிகால் அமைக்க வேண்டும். மழை காலங்களில் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதே போல், நல்லாறு பகுதியில் கரையை ஒட்டி ரோடு அமைக்கும் திட்டமும் உள்ளது. மேலும், நல்லாறு, ஜம்மனை ஓடை பகுதிகளில் நான்கு இடங்களில் உயர் மட்டப் பாலம் கட்ட வேண்டியுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு பெற்றால் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவுக்கு முன்னதாக இப்பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு பெற்று பணிகளை துவங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இப்பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் நகரின் குறைந்த பட்சம், 20 ஆண்டு கால வளர்ச்சியைக் கணக்கிட்டு உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியது அவசியமான ஒன்று