Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 21ம் தேதி 'வளர்ச்சி பாரதம்' மண்டல பேச்சு போட்டி

21ம் தேதி 'வளர்ச்சி பாரதம்' மண்டல பேச்சு போட்டி

21ம் தேதி 'வளர்ச்சி பாரதம்' மண்டல பேச்சு போட்டி

21ம் தேதி 'வளர்ச்சி பாரதம்' மண்டல பேச்சு போட்டி

ADDED : மார் 18, 2025 04:01 AM


Google News
திருப்பூர், : இளைஞர் நலத்துறை, நேரு யுவ கேந்திரா (மை பாரத்) சார்பில், 'ஒரே நாடு ஒரே தேர்தல், வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு வழி' எனும் தலைப்பில், பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.

மண்டல போட்டியில் பங்கேற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகும் மாணவ, மாணவியரில் இருந்து மூவர் தேர்வு செய்யப்பட்டு, டில்லி அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முதலிடம் பெறுபவர் பார்லிமெண்டில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, நேற்று துவங்கி வரும், 24ம் தேதி வரை பல்வேறு மண்டலங்களில் பேச்சு போட்டிகள் நடக்கிறது. 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், 'மை பாரத்' இணையதளத்தில் (mybharat.gov.in) ஒரு நிமிட வீடியோவை பதிவேற்றி, ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

திருப்பூர் பார்க்ஸ் கல்லுாரி முதல்வர் நசீமா கூறியதாவது:

இப்போட்டிக்காக, தலா இரு மாவட்டங்கள் ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், திருப்பூர், ஈரோடு மாவட்டத்துக்கான மண்டல போட்டி, திருப்பூர், சின்னக்கரை பார்க்ஸ் கல்லுாரியில் வரும், 21ம் தேதி நடக்கிறது. வீடியோ பதிவேற்றத்துக்கு நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் இதுவரை, 158 பேர் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில், 150 பேர் முதல் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் இருந்து, பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு, மாநில போட்டிக்கு அனுப்பப்படுவர். மாநில போட்டி, மார்ச், 25 மற்றும், 26ம் தேதி சென்னையில் நடத்தப்படும். மாநில போட்டியில் முதலிடம் பெறுபவர், பார்லிமென்ட்டில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us