/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு
சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு
சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு
சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு
ADDED : மே 27, 2025 10:29 PM
பொங்கலுார் : வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விரைவில் தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது; சுற்றுப்புற கிராம மக்களுக்கு விலக்கு அளிக்கிறோம் என்று கூறிவிட்டு, அதை மீறி அடிக்கடி பிரச்னைகளை ஏற்படுத்தி சுங்கம் வசூலிப்பதை கண்டித்து திருப்பூரில் மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன், மாநில தலைவர் சண்முகசுந்தரம், கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம், மாநகர செயலாளர் ரமேஷ், உழவர் சந்தை வாகன உரிமையாளர்கள் சங்கம், உழவர் சந்தை விவசாயிகள் சங்கம், அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.