/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்
'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்
'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்
'கப்ஸ்' தாங்க முடியல... வாகன ஓட்டிகள் அலறல்
ADDED : ஜன 11, 2024 07:17 AM

பொங்கலுார் : திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில் நகர், பகவதி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் நாச்சிபாளையம் தனியார் பள்ளி அருகே ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது.
இதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இது கொடுவாய் - நாச்சிபாளையம் ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; மேற்கொண்டும் ரோட்டோரத்தில் குப்பைகளை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.