Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்கள் 'கப்சிப்'

ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்கள் 'கப்சிப்'

ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்கள் 'கப்சிப்'

ஒன்றியக்குழு கூட்டம் கவுன்சிலர்கள் 'கப்சிப்'

ADDED : ஜன 31, 2024 01:06 AM


Google News
பொங்கலுார்:பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில், வழக்கம் போல, இரண்டு கவுன்சிலர் மட்டுமே பேசினர். பிற கவுன்சிலர்கள் அமைதியாக இருந்தனர்.

பொங்கலுார் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் குமார் தலைமையில் நடந்தது. ஏ.பி.டி.ஓ., ஷெல்டன் பெர்னாண்டஸ் வரவேற்றார். பி.டி.ஓ., விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.

கூட்ட விவாதம் வருமாறு:

சுப்பிரமணி (தி.மு.க.,): மாணவர் நலனுக்காக நல்லகாளிபாளையத்திலிருந்து பொல்லிக்காளிபாளையத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். குருநாதம்பாளையம் நால் ரோட்டில் சம்ப் கட்ட வேண்டும்.

குமார் (தலைவர்): லோக்சபா தேர்தலுக்கு பின் பஸ் வழித்தடம் குறித்து பேசலாம்.

ஜோதிபாசு (இ.கம்யூ.,): அத்திக்கடவு குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். சுங்கச்சாவடி அகற்ற தீர்மானம் போட வேண்டும். வடக்கு அவிநாசிபாளையம் அங்கன்வாடி மையம் பழுதாகியுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

வழக்கம் இரண்டு கவுன்சிலர் தவிர, மற்றவர்கள் யாரும் பேசவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us