/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இரட்டை சதம் நோக்கி கொப்பரை விலை 'விர்ர்...' இரட்டை சதம் நோக்கி கொப்பரை விலை 'விர்ர்...'
இரட்டை சதம் நோக்கி கொப்பரை விலை 'விர்ர்...'
இரட்டை சதம் நோக்கி கொப்பரை விலை 'விர்ர்...'
இரட்டை சதம் நோக்கி கொப்பரை விலை 'விர்ர்...'
ADDED : மே 24, 2025 12:42 AM
பொங்கலுார் : கடந்தாண்டு தென்னை சாகுபடி செய்த பகுதிகளில் போதிய மழை இன்றி கடும் வறட்சி தாக்கியது. வறட்சி காரணமாக பல்வேறு நோய்கள் தென்னையை தாக்கியது.
எனவே, விளைச்சல் பெரும் பகுதி குறைந்து விட்டது. தேங்காய் வரத்து குறைவாக இருப்பதால் உணவு தேவைக்கே பெரும் பகுதி சென்று விடுகிறது. இதனால், கொப்பரை உற்பத்திக்கு தேங்காய் கிடைப்பதில்லை. இதனால் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான உலர் கலங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. இதனால் கொப்பரை வரத்து குறைந்து விட்டது. இதைத்தொடர்ந்து விலை ஏறுமுகமாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் கிலோ, 80 ரூபாயாக இருந்த கொப்பரை 200 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேங்காய் விலை உயர்ந்து வருவதால் சாதாரண மக்கள் உணவுத் தேவைக்காக தேங்காய் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தென்னை விவசாயிகள் சிலர் கூறுகையில், 'ஓராண்டு வறட்சி நிலவினால் மூன்று ஆண்டுகள் உற்பத்தி பாதிக்கும். தற்போது அதுதான் நடக்கிறது. எனவே, தமிழகம் எங்கும் கிடப்பில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு போன்ற நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பை தீவிர படுத்த வேண்டும். இதன் மூலம் தென்னை விளைச்சல் சரிவை தடுக்க முடியும்,' என்றனர்.


