Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்குவதில்... தொடரும் சிக்கல்!ஆதார் பதிவு முகாம்களை அதிகரிக்க வலியுறுத்தல்

மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்குவதில்... தொடரும் சிக்கல்!ஆதார் பதிவு முகாம்களை அதிகரிக்க வலியுறுத்தல்

மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்குவதில்... தொடரும் சிக்கல்!ஆதார் பதிவு முகாம்களை அதிகரிக்க வலியுறுத்தல்

மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்குவதில்... தொடரும் சிக்கல்!ஆதார் பதிவு முகாம்களை அதிகரிக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 05, 2024 02:08 AM


Google News
உடுமலை;பள்ளி மாணவர்களுக்கு ஆதார் மற்றும் போஸ்டல் வங்கி கணக்குகள் துவங்குவதில், குளறுபடி ஏற்படுவதால், பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை பள்ளிகள், 226ம், மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் 30ம் உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் வாயிலாக, அரசின் சார்பில் நிதியுதவியும், கல்வி உதவித்தொகையும் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

இதுவரை பெற்றோர் அல்லது பள்ளி நிர்வாகத்தினர் வங்கிக்கணக்கின் வாயிலாக, இந்த உதவிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அனைத்தும் நேரடியாக இருக்க வேண்டுமென்றும், அனைத்து மாணவர்களுக்கும் வங்கிக்கணக்குகள் துவங்குவதற்கு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள மாணவர்கள் அனைவருக்கும் கணக்கு துவக்க அறிவுறுத்தப்பட்டது. வங்கிக்கணக்குகள் துவங்குவதற்கு, குறைந்தபட்ச டெபாசிட் தொகை தேவையாக உள்ளது. ஆனால் தபால் வங்கிக்கணக்கு துவங்குவதற்கு அவ்வாறு தேவையில்லை.

இதனால் பள்ளிகளில், தபால் வங்கி கணக்குகள் துவங்குவதற்கு சிறப்பு முகாம் நடத்துவதற்கு, கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியது.

இதன்படி, உடுமலை வட்டாரத்தில், இரண்டு முகாமும், குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் தலா ஒரு முகாமும், அந்தந்தபள்ளிகளுக்கு அருகிலுள்ள தபால் நிலையங்களின் சார்பில், நடத்தப்படுகின்றன.

ஆனால் முகாம்கள் நடந்தாலும், மாணவர்களுக்கு கணக்கு துவக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தபால் வங்கிக்கணக்கு துவங்குவதற்கு, ஆதார் பதிவு கட்டாயத்தேவையாக உள்ளது. பள்ளியிலுள்ள பெரும்பான்மையான மாணவர்களின் ஆதார் பதிவுகள் புதுபிக்கப்படவில்லை.

இதனால் கணக்கு துவங்கும் போது, அந்த ஆதார் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பள்ளிகளில் மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு துவக்க முடியாமல் சிக்கலாகியுள்ளது.

மறுபக்கம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டாயம் என்பதால் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

ஆனால், அதிலும் ஆதார் பதிவு குழுக்கள், மிக குறைவான எண்ணிக்கையாக இருப்பதால், ஒரு வட்டாரத்தில் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளில்தான் முகாம் நடக்கிறது.

ஒரு பள்ளியில் முகாம் நிறைவு செய்வதற்கு, குறைந்தபட்சமாக ஐந்து நாட்களாகிறது. மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் கூடுதல் நாட்கள் எடுக்கிறது.

இதனால் வருவாய்த்துறை அலுவலகம், இ - சேவை மையங்களிலும் பெற்றோர் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஆதார் பதிவு முகாமின் குளறுபடியால், மாணவர்களுக்கான வங்கிக்கணக்கு துவங்குவதிலும் தாமதமாகிறது.

ஆனால் நடைமுறை சிக்கல்களை கண்டுகொள்ளாமல், கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் நெருக்கடி அளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆதார் பதிவு விரைவுபடுத்தணும்

பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:வங்கிக்கணக்கு துவங்குவதற்கு, ஒருவழியாக தபால் அலுவலர்களை அழைத்து வந்து முகாம் நடத்தினால், பாதிக்கும் மேல் மாணவர்களின் ஆதார் பதிவுகள் புதுப்பிக்கப்பட வேண்டுமென வருகிறது.பெற்றோருக்கு அதை அறிவுறுத்தினால், அவர்கள் பள்ளியில் ஆதாருக்கான சிறப்பு முகாம் அமையுங்கள் என்கின்றனர். ஏற்கனவே நடக்கும் ஆதார் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.ஆதார் பதிவுகளை விரைவு படுத்தி, அப்பணிகளை முடித்தால் தான், வங்கிக்கணக்கு துவக்க முடியும். இதை கல்வித்துறையும் புரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us