/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்; தீர்வு காண ஆலோசனை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்; தீர்வு காண ஆலோசனை
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்; தீர்வு காண ஆலோசனை
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்; தீர்வு காண ஆலோசனை
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசல்; தீர்வு காண ஆலோசனை
ADDED : செப் 10, 2025 09:58 PM
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காண, அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்டு, கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
இரு பஸ் ஸ்டாண்டிற்கும் செல்லும் பயணியர், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பை, கடந்து பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் போது, பொதுமக்கள் மற்றும் வாகனம் ஓட்டுபவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில், நகராட்சித்தலைவர் மத்தீன் தலைமையில், தாசில்தார், போக்குவரத்து உதவி ஆய்வாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர், தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், பஸ் ஸ்டாண்டிலிருந்து, கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்கவும், அனுசம் ரோட்டில் இருந்து, பைபாஸ் ரோட்டை இணைக்கும் வழித்தடத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றுதல், கூடுதல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பொள்ளாச்சி - பழநி ரோட்டில் வேகத்தடை அமைக்க திட்டமிடப்பட்டது.
மேலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ளே மற்றும் வெளியே உள்ள தள்ளுவண்டி ஆக்கிரமிப்புகளை அரசு துறை அதிகாரிகள் இணைந்து அகற்றவும், ரவுண்டானா பகுதியிலுள்ள ஐந்து ரோடுகளிலும் வேகத்தடைகள் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட்களை இணைக்கும் பகுதியில், சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளதால், நகராட்சி அலுவலர்கள் இணைந்து, கூட்டாக ஆய்வு செய்து சுரங்கப்பாதை அமைக்க, திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பி மேற்கொள்ளப்படும், என முடிவு செய்யப்பட்டுள்ளது.