/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சுற்றுலா தலங்களுக்கு நெரிசல் பயணம் கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்சுற்றுலா தலங்களுக்கு நெரிசல் பயணம் கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்
சுற்றுலா தலங்களுக்கு நெரிசல் பயணம் கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்
சுற்றுலா தலங்களுக்கு நெரிசல் பயணம் கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்
சுற்றுலா தலங்களுக்கு நெரிசல் பயணம் கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்
ADDED : பிப் 12, 2024 12:25 AM
உடுமலை:விடுமுறை நாட்களில், சுற்றுலா தலங்களுக்கு உடுமலையில் இருந்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திருமூர்த்தி மற்றும் அமராவதி அணை அமைந்துள்ளது.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக இந்த இரு அணைகளும் உள்ளன. அமராவதி அணை அருகே முதலைப்பண்ணை, அணைப்பூங்கா அமைந்துள்ளது.
திருமூர்த்திமலையில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
எனவே, விடுமுறை நாட்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர் அதிகளவு வருகின்றனர். மேலும், திருப்பூர், கோவை சுற்றுப்பகுதிகளில் இருந்தும் மக்கள், இச்சுற்றுலா தலங்களுக்கு வருகின்றனர்.
ஆனால், உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து திருமூர்த்திமலை, அமராவதிக்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால், அவ்வழித்தடத்திலுள்ள கிராம மக்களும், பிற பகுதிகளில் இருந்து வருபவர்களும் நெருக்கியடித்தபடி, பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது.
அதிக கூட்டம் காரணமாக, ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
திருமூர்த்திமலைக்கு மட்டும், அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், உடுமலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நடைமுறையை விடுமுறை நாட்களிலும் அமல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில், திருமூர்த்திமலை, அமராவதிக்கு, உடுமலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
அரசு போக்குவரத்து கழகத்தினர் விடுமுறை நாட்களில், திருமூர்த்திமலை, அமராவதி வழித்தட பஸ்களில் நிலவும் நெரிசல் குறித்து கண்காணித்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், சுற்றுலா பயணியர் பயன்பெறுவதுடன், வழித்தடத்திலுள்ள கிராம மக்களும் நெரிசல் இல்லாமல், பயணிப்பார்கள்.