/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொத்தமல்லி தழை உற்பத்தி பாதிப்பால் கவலை கொத்தமல்லி தழை உற்பத்தி பாதிப்பால் கவலை
கொத்தமல்லி தழை உற்பத்தி பாதிப்பால் கவலை
கொத்தமல்லி தழை உற்பத்தி பாதிப்பால் கவலை
கொத்தமல்லி தழை உற்பத்தி பாதிப்பால் கவலை
ADDED : ஜூன் 06, 2025 12:31 AM
உடுமலை, ; கொத்தமல்லி சாகுபடியில், நோய்த்தாக்குதல் காரணமாக, தழை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், விதை தேவைக்காக, மானாவாரியாக கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
பின்னர், வீரிய ரக விதைகள் அறிமுகமாகி, சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி தழை தேவைக்காக கிணற்றுப்பாசனத்தில், இச்சாகுபடி பரப்பு அதிகரித்தது.
பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனில், கொத்தமல்லி தழைக்கு கிராக்கி அதிகமிருக்கும். ஏக்கருக்கு, 7-10 டன் வரை தழை விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தழைக்காக பயிரிடும் போது, செடிகள் நெருக்கமாக இருக்கும் வகையில் பராமரிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சீசனில், அதிக வெயில் உட்பட காரணங்களால், கொத்தமல்லி செடிகள் முளைப்பு திறன் பாதிக்கப்பட்டது.
இதனால், தழை அறுவடை குறைந்து, வருவாய் குறைந்துள்ளதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கொத்தமல்லி தழை சாகுபடியில், தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. சந்தை வாய்ப்புகளும் குறைந்துள்ளது. எனவே அடுத்த சீசனில், மாற்றுச்சாகுபடிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.