/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுற்றுச்சூழல் தின விழா மாணவர்களுக்கு போட்டி சுற்றுச்சூழல் தின விழா மாணவர்களுக்கு போட்டி
சுற்றுச்சூழல் தின விழா மாணவர்களுக்கு போட்டி
சுற்றுச்சூழல் தின விழா மாணவர்களுக்கு போட்டி
சுற்றுச்சூழல் தின விழா மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜூன் 22, 2025 11:19 PM

உடுமலை: உடுமலையில், சுற்றுசூழல் தினத்தையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுசூழல் சங்கம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளை நடத்தியது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா உடுமலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.
அறிவியல் கழக துணை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார்.