Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கல்

இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கல்

இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கல்

இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கல்

ADDED : மே 10, 2025 02:40 AM


Google News
காங்கயம், :காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட பல இடங்களில் தெரு நாய்களால் கடிபட்டு ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாகின. விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, மாநில அரசு, இழப்பீடு அறிவித்தது.

தாராபுரம் தாலுகா அலுவலகத்தில், அமைச்சர் கயல்விழி, தெருநாய்களால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கான இழப்பீடு தொகைக்கான காசோலையை, அதன் உரிமையாளர் களுக்கு வழங்கினார்.

காங்கயம் பகுதியில், தெரு நாய்களால் கடிபட்டு இறந்த, 125 ஆடுகள், கோழிகளுக்கு, 9.8 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க, நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில், ஆடுகளை பறிகொடுத்த, 54 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில், முதற்கட்டமாக, ஆடுகளை இழந்த, 14 பேருக்கு இழப்பீடு தொகைக்கான காசோலையை, காங்கயம் தாசில்தார் மோகனன் வழங்கினார். எஞ்சியவர்களுக்கு இரு நாளில் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் பகவான், சிவன்மலை வி.ஏ.ஓ., சுகன்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us