/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளி மேலாண்மை குழுவின் பாராட்டுக்குரிய செயல் பள்ளி மேலாண்மை குழுவின் பாராட்டுக்குரிய செயல்
பள்ளி மேலாண்மை குழுவின் பாராட்டுக்குரிய செயல்
பள்ளி மேலாண்மை குழுவின் பாராட்டுக்குரிய செயல்
பள்ளி மேலாண்மை குழுவின் பாராட்டுக்குரிய செயல்
ADDED : ஜூன் 26, 2025 11:47 PM

திருப்பூர்; அவிநாசி - மேட்டுப்பாளையம் ரோடு, கருவலுார் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கடைகளில் ஒரு அறிவிப்பு 'பிரின்ட் அவுட்' எடுத்து ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'பள்ளி மேலாண்மை குழு, கருவலுார்' சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், ''இங்கு பள்ளி மாணவர்களுக்கு அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படமாட்டாது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சலுான் கடைகளில், 'இங்கு பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் கட்டிங் தவிர எந்த முடிதிருத்தமும் செய்யப்படமாட்டாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு துவங்கியதும், பள்ளியை சுற்றியுள்ள பகுதியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. மாவட்ட கல்வித்துறை தரப்பில் இருந்து 'மாடல், ஸ்டைல் கட்டிங் கூடாது' என மாணவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது.
கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மை குழுவினர் ஆலோசித்து, பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் இத்தகைய அறிவிப்புகளை வைத்துள்ளனர். வியாபாரிகளும் இதற்கு ஒத்துழைப்பதால், மாவட்ட கல்வித்துறையினர் உட்பட அனைவரும் இச்செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.